இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்தொன்று சுமார் 300 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
குலார் பஜார் பகுதிக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து இடம்பெற்றதைத் தொடர்ந்து, மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்தவர்களை மீட்பதற்காக மீட்புக் குழுவினர் விசேட நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.










