மாத்தறை-வல்கம வடக்கு பகுதியில் மூத்த சகோதரரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 39 வயதுடைய இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டினுள் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இரு சகோதரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், மூத்த சகோதரர் இராணுவ அதிகாரியை வாளால் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த வல்கம வடக்கு பகுதியைச் சேர்ந்த குறித்த இராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










