அஸ்வெசும நலன்புரி உதவித்திட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள புதிய பயனாளர்கள் வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கும், தங்களது தகவல்களை உறுதிப்படுத்துவதற்கும் இன்று செவ்வாய்க்கிழமை முதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, புதிய அஸ்வெசும பயனாளர்கள் தங்களுக்கான கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக அரச வங்கியொன்றில் தனியான சமூகப் பாதுகாப்பு நலன்புரி கணக்கொன்றைத் திறக்க வேண்டும்.
இதற்கான பரிந்துரைக் கடிதங்களை இன்று முதல் தமக்குரிய பிரதேச செயலகத்தின் நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும்.
வங்கிக் கணக்கைத் திறந்த பின்னர் மீண்டும் பிரதேச செயலகத்திற்குச் சென்று வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களைப் புதுப்பிப்பது கட்டாயமாகும்.
எவ்வாறாயினும், ஏற்கனவே செயற்பாட்டிலுள்ள அஸ்வெசும வங்கிக் கணக்கைக் கொண்டுள்ள பயனாளர்கள் புதிய கணக்கொன்றைத் திறக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும், புதிய பயனாளர்கள் மற்றும் இரண்டாம் கட்ட பயனாளர்களுக்கான நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவை எதிர்வரும் 27ஆம் திகதி வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.










