மினுவாங்கொடை, வல்பிட்டமுல்ல பகுதியில் தலையில் காயங்களுடன் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சடலம் நேற்று திங்கட்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்தவர் மினுவாங்கொடை பகுதியில் வசித்து வந்த யாசகர் எனத் தெரியவந்துள்ளது.
அவரது தலையில் காயங்கள் காணப்பட்டுள்ள நிலையில், மரணம் ஏற்பட்ட சூழ்நிலை தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
குறித்த காயங்கள் வீதி விபத்தின் காரணமாக ஏற்பட்டதா அல்லது குற்றச் செயல் ஒன்றின் விளைவாக ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணையாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










