இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 336 முதல் 337 ரூபாவுக்கு இடைப்பட்ட மட்டத்தில் பதிவாகியுள்ளது.
செலான் வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.25 ரூபாவாகவும், விற்பனை விலை 337.50 ரூபாவாகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
NDB வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.00 ரூபாவிலிருந்து 328.30 ரூபாவாகவும், விற்பனை விலை 337.00 ரூபாவிலிருந்து 337.30 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கியில் கொள்வனவு விலை 328.50 ரூபாவிலிருந்து 328.65 ரூபாவாகவும், விற்பனை விலை 336.65 ரூபாவிலிருந்து 336.80 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 326.58 ரூபாவிலிருந்து 326.77 ரூபாவாகவும், விற்பனை விலை 336.50 ரூபாவிலிருந்து 336.70 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியிலும் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.50 ரூபாவிலிருந்து 328.75 ரூபாவாகவும், விற்பனை விலை 336.50 ரூபாவிலிருந்து 336.75 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.










