வீட்டுக்குள் இருக்கவே அச்சப்படும் நிலைதான் தவெகவின் சாதனையா? – மு.க. ஸ்டாலின் கேள்வி
தமிழகத்தில் நிலவும் கொலைச் சம்பவங்கள் தொடர்பாக, முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) விமர்சித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டியே அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக புதன்கிழமை (அக். 28) தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மு.க. ஸ்டாலின், தூத்துக்குடியில் நான்கு நாட்களில் ஏழு கொலைகள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சம்பவங்களுக்கு மாவட்டக் காவல்துறையினர் என்ன விளக்கம் அளிக்கப்போகின்றனர் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “வெளியில்தான் பாதுகாப்பில்லை, நிம்மதியாக யாரும் நடமாட முடியவில்லை என்று பார்த்தால், வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலைக்கு மக்களைத் தள்ளியதுதான் தவெகவின் சாதனையா?” எனவும் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.










