இந்தியக் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தபோது ஏற்பட்ட மின்தடை குறித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.
தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக மதுரை சென்றிருந்த குடியரசு துணைத் தலைவர், இன்று (30) மாலை மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது கோயிலில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக அமைச்சர் தனது எக்ஸ் தளப் பதிவில், குடியரசு துணைத் தலைவரின் வருகையை முன்னிட்டு பிற்பகல் 3.30 மணி முதல் கோயிலுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பின்போது கோயிலின் மின் அறையில் ஏற்பட்ட கோளாறே மின்தடைக்குக் காரணம் என்றும், உடனடியாக ஜெனரேட்டர் மின்விநியோகத்திலிருந்து மின்சார வாரியத்தின் விநியோகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாற்றம் இரண்டு நிமிடங்களுக்குள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.










