கொச்சிக்கடை-தலுவகொடுவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சுற்றிவளைப்பின்போது 4,210 போதை மாத்திரைகளுடன் 59 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு மாகாண வடக்கு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை மாலை இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கு மாகாண வடக்கு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.










