சென்னை வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ புகையிரத சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ புகையிரத திட்டம் கட்டம்-II, வழித்தடம் 4 இன் முதற் பகுதியான 14.64 கிலோ மீற்றர் நீளத்திலான பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ புகையிரத நிலையம் முதல் வடபழனி மெட்ரோ புகையிரத நிலையம் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில், மெட்ரோ புகையிரத சேவை மற்றும் 11 உயர்மட்ட மெட்ரோ புகையிரத நிலையங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் இணைந்து கொடியசைத்து புகையிரத சேவையை உத்தியோகபூர்மாக ஆரம்பித்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உடன் மெட்ரோ புகையிரதத்தில் பயணம் செய்தார்.









