உனவட்டுன கடலில் நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 35 வயதுடைய சீனப் பெண் சுற்றுலாப் பயணி பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் குறித்த பெண் கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் சிக்கி கரையிலிருந்து தொலைவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது கடற்கரையில் கடமையில் இருந்த பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் உடனடியாகச் செயற்பட்டு, குறித்த பெண்ணை வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.
இந்த மீட்பு நடவடிக்கையில் உப பொலிஸ் பரிசோதகர் சிறிமல், பொலிஸ் கான்ஸ்டபிள் உவிந்து (99266) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் குலசேகர (102444) ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பெண்ணுக்கு அடிப்படை முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்ட பின்னர், அவர் தனது சக பயணிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.










