ப்ளைடுபாய் விமானத்தின் துணை விமானி, விமானத்தின் தலைமை விமானியை ‘கிராஷ் ஆக்ஸ்’ எனப்படும் அவசரகால கோடரியால் தாக்கி, விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முயன்றதன் மூலம் ‘பயங்கரவாதச் செயலை’ மேற்கொள்ள முயன்றதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
174 பேருடன் டுபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்த ப்ளைடுபாய் FZ1073 விமானத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதையடுத்து, விமானம் சவூதி அரேபியாவுக்கு திருப்பி விடப்பட்டது.
சம்பவத்துக்கான நோக்கம் மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏதேனும் தொடர்புகள் குறித்து கண்டறிவதற்காக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“சம்பவத்தின் அனைத்து சூழ்நிலைகள், அதற்கான நோக்கங்கள் மற்றும் தொடர்புடைய இணைப்புகள் குறித்து கண்டறிவதுடன், தொழில்நுட்ப பரிசோதனைகளை நிறைவு செய்து, உடல் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்வதற்காக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது” என சட்டமா அதிபர் அல்-ஷம்சி தெரிவித்துள்ளார்.
தேவையான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்ததும் விசாரணையின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘கிராஷ் ஆக்ஸ்’ என்பது விமான அவசரநிலைகளின்போது விமானத்தின் உடற்பகுதியை வெட்டி வெளியேறுவதற்கு விமானிகள் பயன்படுத்துவதற்காக விமானி அறையில் வைக்கப்படும் ஒரு கருவியாகும்.










