கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, தனது அமைச்சின் சேவைகள் தொடர்பான பிரச்சினைகள், விளக்கங்கள் அல்லது முன்மொழிவுகளை வாட்ஸ்அப் குரல் செய்தி மூலம் நேரடியாக தமக்கு அனுப்புமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பொதுமக்களால் அனுப்பப்படும் கேள்விகள் மற்றும் முன்மொழிவுகளின் தேசிய முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, அவற்றுக்கான தனது பதில்கள் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்காக 077 554 1646 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு குரல் செய்திகளை அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.











