2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான 40ஆவது தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ள சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் 20 வயதுக்குட்பட்ட உதைப்பந்தாட்ட அணி மற்றும் 18 வயதுக்குட்பட்ட பூப்பந்தாட்ட அணிகளுக்கு சம்மாந்துறை பிரதேச சபையினால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் மாணவர்களின் போக்குவரத்துச் செலவுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான காசோலை, சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ஆர்.எம். உவைஸிடம் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.எம். பஹ்மி மற்றும் ஹாதிக் இப்றாகீம், பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்கு தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
தேசிய மட்டப் போட்டிகளில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள மாணவர்களின் பயணத்திற்கு இந்த நிதியுதவி ஆதரவாக அமைந்துள்ளது.










