இலங்கையில் வேலையின்மை வீதம் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 4.0 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய வாராந்த பொருளாதாரக் குறிகாட்டிகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டின் இதே காலாண்டில் நாட்டின் வேலையின்மை வீதம் 3.8 சதவீதமாக காணப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அது 4.0 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, தொழிலாளர் படையின் பங்கேற்பு வீதமும் அதிகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 49.3 சதவீதமாக இருந்த தொழிலாளர் படையின் பங்கேற்பு வீதம், 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 50.0 சதவீதமாக உயர்ந்துள்ளது.











