சினிமா தியேட்டர் கதிரைக்கு கீழ் பெண்ணின் உள்ளாடை

இலங்கையின் சினிமா திரையரங்கொன்றில் பெண்ணின் உள்ளாடை ஒன்று கேட்பாரற்று கிடக்கின்ற புகைப்படம் சமூக வைத்தளங்களில் வெளியாகி உள்ள நிலையில், நாட்டில் தற்போது கலாச்சார சீர்கேடு அதிகமாகி வருவதாக பல்வேறு தரப்பினர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கில் அண்மைக்காமாக குற்றச்செயல்களும், காலாச்சார சீர்கேடுகளும் அதிகமாக இடம்பெறுகின்றது.

பதன்ம வயது காதல்களும் அதனால் இடம்பெறும் தற்கொலைகளும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இவை பற்றி ஊடகங்கள் ஊடாக வெளிச்சத்துக்கு வந்துள்ள அதேவேளை வெளிச்சத்துக்கு வராத சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டேதான் செல்கின்றது. இப்படியே சென்றால் நாளைய சந்ததியின் நிலமை என்னவாகுமோ என்ற கவலையை தோற்றுவித்துள்ளது.

பொது இடங்களில் கூச்சமின்றி , இணையங்களுக்கு அடிமையாகி அதனால் வரும் விளைவுகளைப்பற்றிக்கூட சிந்திக்காது, இதுதான் வாழ்க்கை என போதைபொருளும், கூத்துக்களும் அரங்கேறிகொண்டிருக்கின்றன.

ஒருகாலத்தில் கலாசாரத்துடன் கட்டுக்கோப்பாக வாழ்ந்த எம்மினம் இன்று தெறிகெட்டு போய்க்கொண்டிருக்கின்றது. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என இன்றைய இளய சமூதாயம் எதைப்பற்றியும் கவலைப்படாது மனம்போன போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

எனவே பிள்ளைகள் வெளியில் செல்லும்போதும், கல்விக்காக பிற பிரதேசங்களுக்கு அனும்பும்போதும் அவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் கவனமெடுக்காவிட்டால், அதன் விளைவு விபரீதமாகிவிடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.