Sri Lanka Tamil News Site

கிழக்கு உக்ரைனின் சோலேடரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ரஷ்யா அறிவிப்பு

- Advertisement -

கிழக்கு உக்ரைனில் உள்ள சோலேடரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ரஷ்யப் படைகள் தெரிவித்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வெற்றி தனது படைகளின் வெற்றியின் நம்பிக்கையை வளர்க்க பெரும் உதவியாக இருக்கும் என்று ரஷ்ய ராணுவ தளபதி ஒருவர் தெரிவித்தார்.

- Advertisement -

எனினும், அது பொய்யான அறிக்கை என்றும், அந்த பகுதியில் இன்னும் சண்டை நடந்து வருவதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, உப்புத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட சோலேடார் ஒரு சிறிய நகரம் என்றும் ரஷ்ய படைகள் அதை கையகப்படுத்துவதற்கான போராட்டத்தில் பல நாட்களாக ஈடுபட்டுள்ளன என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

- Advertisement -