மெர்சிடிஸ் அணியின் கிமி அன்டோனெல்லி, போர்முலா வன் உலக சம்பியன் பட்டத்தை வென்று, அத்தொடரின் வரலாற்றில் மிக இளம் வயதில் உலக சம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இதன்படி, தனது 20 ஆவது வயதில் உலக சம்பியன் பட்டத்தை வென்ற அவர், 2010 ஆம் ஆண்டு தனது 23 ஆவது வயதில் இந்தச் சாதனையைப் படைத்த செபஸ்டியன் வெட்டலின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், 1953 ஆம் ஆண்டு அல்பெர்டோ அஸ்காரிக்குப் பின்னர் போர்முலா வன் உலக சம்பியன் பட்டத்தை வென்ற முதல் இத்தாலிய வீரர் என்ற பெருமையையும் அன்டோனெல்லி பெற்றுள்ளார்.
மெக்சிகோ சிட்டி கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் சம்பியன் பட்டத்தை உறுதிப்படுத்திய அவர், இதன் மூலம் போர்முலா வன் வரலாற்றில் புதிய சாதனையையும் பதிவு செய்துள்ளார்.










