ஆஸ்திரியாவில் நடைபெற்று வரும் வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
முதல் சுற்றுப் போட்டியில் ஸ்பெயினின் டேனியல் மெரிடாவை எதிர்கொண்ட மெத்வதேவ், 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
முதல் செட்டில் கடுமையான போட்டியை எதிர்கொண்ட அவர், டைபிரேக்கரில் வெற்றிபெற்று முன்னிலை பெற்றார். தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றியை உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் இத்தாலியின் பிளேவியோ கோபாலி, பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவை 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றார்.
இதற்கிடையில், நாளை நடைபெறவுள்ள இரண்டாவது சுற்றுப் போட்டியில் டேனில் மெத்வதேவ், பிரிட்டனின் கேமரூன் நூரியை எதிர்கொள்ளவுள்ளார்.










