ஹம்பேகமுவ – மாவ் ஆரா பகுதியில் சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 36,710 கஞ்சா செடிகள் சுற்றிவளைப்பின்போது அழிக்கப்பட்டுள்ளதுடன், மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மொனராகலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன்போது, ஆறு முதல் எட்டு அடி வரை உயரமாக வளர்ந்திருந்த கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட 36,710 கஞ்சா செடிகளும் வேருடன் பிடுங்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே தீயிட்டு அழிக்கப்பட்டதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பேகமுவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.










