எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை ஓமானில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவினால் 15 வீரர்களைக் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
இதன்படி, விரான் சமுதித அணித் தலைவராகவும், செனுஜ வெகுணகொட உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அணியின் ஏனைய வீரர்கள்:
ரெஹான் பீரிஸ், கித்ம விதானபதிரண, கிம்ஹான் ரசாஞ்சன, சனுல் வீரரத்ன, சனிரு சேனாரத்ன, லித்ம பெரேரா, விஷ்ணேஸ்வரன் ஆகாஷ், செத்மிக செனவிரத்ன, கிம்ஹான் மெண்டிஸ், லதேந்திர ஆகாஷ், ஹிமாரு தேஷான், ஸ்டீவன் பீரிஸ் மற்றும் கௌஷிக் குமாரசிங்க.
இலங்கை அணி, போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி ஓமானுக்குப் பயணிக்கவுள்ளது.










