இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்பதற்குச் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய, லங்கா பிரீமியர் லீக் (LPL) உட்பட ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 3 உரிமையாளர் (Franchise) லீக் போட்டிகளில் மட்டுமே வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படுவர்.
தேசிய அணிக்கு வீரர்கள் முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்யும் வகையில், எல்.பி.எல் (LPL) உட்பட வருடத்திற்கு அதிகபட்சம் மூன்று வெளிநாட்டு லீக் தொடர்களில் மாத்திரமே பங்கேற்க அனுமதி வழங்கப்படவுள்ளது.
முன்னர் இதே போன்ற கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்ட போினும் அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எனினும் இம்முறை புதிய விதிமுறைகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு லீக் போட்டிகளுக்கான தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கும் முறை பலப்படுத்தப்படவுள்ளதுடன், வீரர்களின் உடற்தகுதிச் சோதனையே அனுமதி வழங்குவதற்கான முக்கிய காரணியாக இருக்கும்.
வீரர்களின் உடற்தகுதியை மேம்படுத்தவும், பணிச்சுமையைக் கட்டுப்படுத்தவும், வணிக ரீதியான லீக் போட்டிகளைக் காட்டிலும் தேசிய அணிக்கான கடமைகளுக்கு முதலிடம் வழங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.










