இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று திங்கட்கிழமை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் பெரும்பாலும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபா முதல் 337 ரூபா வரையான மட்டத்தில் பதிவாகியுள்ளது.
செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.25 ரூபாவாகவும், விற்பனை விலை 337.50 ரூபாவாகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
NDB வங்கியில் கொள்வனவு விலை 328 ரூபாவாகவும், விற்பனை விலை 337 ரூபாவாகவும் தொடர்கிறது.
மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.55 ரூபாவிலிருந்து 328.50 ரூபாவாகவும், விற்பனை விலை 336.70 ரூபாவிலிருந்து 336.65 ரூபாவாகவும் சிறிதளவு குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் கொள்வனவு விலை 326.58 ரூபாவாகவும், விற்பனை விலை 336.50 ரூபாவாகவும் மாற்றமின்றிப் பதிவாகியுள்ளது.
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.50 ரூபாவாகவும், விற்பனை விலை 336.50 ரூபாவாகவும் மாற்றமின்றித் தொடர்கிறது.










