பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் யாரும் தொடர்புகொள்ள முடியவில்லை என அவரது மகன் சுலைமான் கான் தெரிவித்துள்ளார்.
சிறையில் தனது தந்தை சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இம்ரான் கானின் சிறைவாசத்திற்கு பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றுள்ள இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
எனினும், சிறையில் துன்புறுத்தப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அரசாங்கம் மறுத்துள்ளது.
இம்ரான் கானின் விடுதலையைக் கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.










