‘பம்பர்’ திரைப்படத்தை இயக்கிய எம். செல்வக்குமார் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் புதிய திரைப்படம் ‘வேட்ட சாமி’.
இத்திரைப்படத்தில் அருள்நிதியுடன் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ஆடுகளம் நரேன், மதுசூதன ராவ், ஹரீஷ் பேரடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘7 மைல்ஸ் பெர் செகண்ட்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், படத்தின் முதல் பாடலான ‘சாமி அழைப்பு’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
வில்லுப்பாட்டு மாதவியின் குரலில், மு. ஜெகன் கவிராஜின் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விரைவில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.









