யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் கலை வட்டம் ஏற்பாடு செய்துள்ள ‘முதுசம்’ நிகழ்ச்சித் தொடரின் ஒரு அங்கமாக, ‘காலி கதிரேசன் கோயில் சுவரோவியங்கள்’ எனும் புகைப்படக் கண்காட்சி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நுண்கலைத்துறையின் கலைக்கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமான இக்கண்காட்சி, எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும்.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், இலங்கையில் எஞ்சியுள்ள மிகப் பழமையான இந்துச் சுவரோவியங்களுள் ஒன்றான, 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த காலி கதிரேசன் கோயில் சுவரோவியங்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கண்காட்சியைப் பார்வையிட வருகை தரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.










