Sri Lanka Tamil News Site

விஷாலின் ‘லத்தி வெளியாகும் திகதி

- Advertisement -

ஆக்சன் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் தனக்கு வெற்றியை கொடுக்கும் என விஷால் எதிர்பார்த்து உள்ளார்.

லத்தி திரைப்படம் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி வெளியாகிறது என விஷால் அறிவித்துள்ளார்.

புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் திரைப்படம் லத்தி. இந்த திரைப்படத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளாக விஷால் நடித்துள்ளார். இதற்காக இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது.

எனவே படத்தை கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளியிட உள்ளதாக விஷால் அறிவித்திருக்கிறார். அதுவும் டிசம்பர் 22ஆம் திகதி படம் வெளியாகிறது.

- Advertisement -

விஷால் – சுனைனா நடித்துள்ள இந்த திரைப்படத்தை, நடிகர்கள் ரமணா – நந்தா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் தனக்கு வெற்றியை கொடுக்கும் என விஷால் எதிர்பார்த்து உள்ளார்.

விஷால் நடிப்பில் கடைசியாக வீரமே வாகை சூடும் என்ற படம் வெளியானது. இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்கு முன்பு வெளிவந்த சக்ரா, எனிமி படங்களும் அதற்கு முன்பு வெளிவந்த சண்டைக்கோழி இரண்டாம் பாகம், அயோக்கியா படங்களும் சுமாரான வரவேற்பை பெற்றது.

2018 இல் வெளியான இரும்புத்திரை படத்திற்கு பின்னர் விஷாலுக்கு சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை எந்த படமும் அளிக்கவில்லை. இந்நிலையில் லத்தி படம் விஷாலுக்கு கம்பேக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

விஷால் தற்போது துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முதலில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை விஷால் இயக்குகிறார்.

 

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!