கிழக்கு மாகாண அழகியற் போட்டிகள் கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள பிரதம கணக்காளர் ஆ.உதயராஜன் தலைமையில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஹசந்தி மற்றும் அழகியல் பாடங்களுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் சிறிதரன் ஆகியோரின் வழிகாட்டலில் இப்போட்டிகள் இடம்பெற்றது.
இப்போட்டிகளின் ஆரம்ப வைபத்திலே கல்குடா கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.நேசகஜேந்திரன் கலந்து கொண்டார்.
இதில் பரதநாட்டியப் போட்டிகள் மற்றும் கர்நாடக சங்கீத போட்டிகள் என்ற ரீதியில் இரண்டு நாட்கள் இப்போட்டிகள் இடம்பெற்றன.
போட்டிகள் 300 மாணவர்களுக்குட்பட்ட பாடசாலகள் ஒரு வகையாகவும், 300 தொடக்கம் 1000 மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் ஒரு வகையாகவும், 1000 மாணவர்களுக்கு மேற்பட்ட பாடசாலைகள் ஒரு வகையாகவும் இடம்பெற்றன.
இதன்போது கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், வளவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு போட்டிகளை நடாத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.

















