தென்கொரியாவில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இரு இலங்கையர்களின் அடையாளங்களை சியோலில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி, உயிரிழந்தவர்கள்:
- தேஹிபிட்டிய விதானலாகே அனில் குமார விஜேரத்ன, 39 வயது – கோதகாவெல, ரன்வல பகுதியைச் சேர்ந்தவர்.
- மகேஸ்வரன் பிரசாந்தன், 31 வயது – வலப்பனை, ஹல்கரனோயா பகுதியைச் சேர்ந்தவர்.
தென்கொரியாவின் ஹ்வாசோங் நகரிலுள்ள ஜங்கான்-மியோன் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்களை இலங்கைக்குக் கொண்டுவருவதற்காக, அவர்களது குடும்பத்தினர், இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் தென்கொரியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.









