நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியாகிய 5 நாட்களில் 500 கோடி வசூலை நெருங்கி வருகிறது.
இதன் மூலம் தமிழ் சினிமாவில் புதிய வசூல் சாதனையை இந்த திரைப்படம் படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் 2 திரைப்படம் கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியானது.
ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி அனைத்து வகையான ரசிகர்களுக்கு மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில் படம் வெளியாகி 5 நாட்களில் 477 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயிலர் படத்தின் முதல் பாகம் ஒட்டுமொத்தமாக 605 கோடி வசூல் செய்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் 477 கோடி வசூல் செய்துள்ளது.
மேலும், தொடர் விடுமுறை காரணமாக ஜெயிலர் 2 திரைப்படத்தை திரையரங்குகளில் மக்கள் அதிக அளவு கண்டு களித்து வருகிறார்கள்.









