இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய தமிழ்த் திரைப்படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
கடந்த 2026 செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தில் நடிகர்கள் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி மற்றும் காக்கா முட்டை விக்னேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மாரி செல்வராஜின் சொந்த தயாரிப்பு நிறுவனமான நவ்வி ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இளையராஜா இசையமைப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
அதில், ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த அற்புதமான நாட்களையும் மறக்க முடியாத அனுபவங்களையும் சாத்தியமாக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.









