தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
அதன்படி தபால் வாக்கு எண்ணிக்கையில் 94 இடங்களில் 67 இடங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவதாக 19 இடங்களில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.
மூன்றாவதாக 8 இடங்களில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.