உனவட்டுன பகுதியில், பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரைப் போன்று நடித்து, அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகள் மூலம் ஒரு மில்லியன் ரூபாய் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பணத்தை வழங்காவிட்டால் முறைப்பாட்டாளரைக் கொலை செய்வதாக சந்தேகநபர்கள் அச்சுறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மத்திய குற்ற விசாரணைப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், நேற்று புதன்கிழமை இரு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 19 மற்றும் 36 வயதுடைய உனவட்டுன பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இயங்கும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒருவரின் அடையாளத்தைப் பயன்படுத்தி, முறைப்பாட்டாளரை அச்சுறுத்தியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










