நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’ பட முதல் பார்வை

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும்  முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.’கஸ்டடி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார்.

‘உலகில் நாம் காண விரும்பும் மாற்றமாக மாறுவோம்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாக சைதன்யா..வேட்டை ஆரம்பிக்கட்டும்!’ என்று இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட்பிரபு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். நாகசைதன்யா நாயகனாக நடிக்கும் அந்தப் படத்திற்கான வேலைகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றன.