நடிகர் விக்ரமின் நோ ஷேவ் நவம்பர் லுக்

தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் விக்ரம்.

நடிகர் விக்ரம் தனது ‘நோ ஷேவ் நவம்பர்’ லுக் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். கதாபாத்திரங்களுக்கேற்றவாறு அர்ப்பணிப்புடன் நடிப்பதில் நடிகர் விக்ரம் பெயர் பெற்றவர். சமீபத்தில் அவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரமின் நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் தற்போது ‘நோ ஷேவ் நவம்பர்’ என்ற லுக்கில் சில புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் விக்ரம்.
நீண்ட தாடி, தலையில் குடுமியுடனான அந்தப் படங்கள் லைக்ஸை குவித்து வருகின்றன.