இந்தியா – ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமாக இருக்கும் பெண் ஒருவர், மாதம் 390 ரூபாய் செலுத்தி தன்னை Subscribe செய்யும் பயனாளிகளுக்கு அரை நிர்வாண வீடியோக்களை பதிவிட்டு எல்லை மீறி வந்துள்ளார்.
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த இவர் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக பணியாற்றி, பிக் பாஸ் உள்ளிட்ட ஷோக்களில் பங்கேற்றுள்ளார்.
மேலும் மொடலிங் துறையிலும் அதீத நாட்டம் கொண்டிருந்தார், அதில் சில திரைப்பட வாய்ப்புகளும் இவரை வீடு தேடி சென்றது.
மறுபுறம் கைச்செலவிற்கான பணத்திற்காக இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் தனது மொடலிங் போட்டோக்கள் மற்றும் காணொளிகளைப் பதிவிட்டு வந்தார்.
அதில் ஈர்க்கப்பட்டு இப் பெண்ணை 1.4 மில்லியன் பேர் இன்ஸ்டாவில் பின்தொடர்ந்துள்ளனர்.
அதன் மூலம் குறிப்பிட்ட வருமானம் கிடைத்துள்ளது. போகப் போக அப்பணத்தின் மதிப்பு கூடிக்கொண்டே சென்றது. அதனால் அப்பெண் தன்னை முழு நேர இன்ஸ்டா பிரபலமாகவே மாற்றிக்கொண்டார்.
அதன் மூலம் விளம்பரம் மற்றும் புரோமோஷன் வேலைகளிலும் ஈடுபட்டு வருமானம் ஈட்டியுள்ளார்.
இந்நிலையில், இன்ஸ்டா தனது ப்ளூ டிக் யூசர்களுக்காக Users Subscribe என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. தனது பயனாளிகளும் இதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ளலாம்.
அதாவது இன்ஸ்டா யூசர்கள், தங்கள் ஐடியில் Subscribe என்ற ஒரு ஆப்ஷனை எனேபிள் செய்தால், அவர்கள் பதிவிடும் ஸ்பெஷல் போஸ்டுகள், Subscribe செய்த பயனர்களால் மட்டுமே பார்க்க முடியும். அதற்கு மாதம் மாதம் சந்தா அறவிடப்படும். அப்படியொரு சந்தா முறையை எனேபிள் செய்த அவர் மாதம் 390 ரூபாய் வசூலிக்கிறார்.
அதில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அப்பெண்ணை Subscribe செய்து வைத்துள்ளனர். அதன் மூலம் மாதம் 12 லட்சம் ரூபாயை இவர் லாபமாக சம்பாதிக்கிறார்.
அரைகுறை ஆடைகளுடன் அருவருக்கத்தக்க வகையில் வீடியோக்களை பதிவிடுவதாகவும், நைட் லைவ் என்ற பெயரில் ஆபாச வீடியோக்களை அப்லோட் செய்து தவறான பாதைக்கு வழிவகுக்கும் வகையில் எல்லை மீறும் செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் மாதம் 390 ரூபாயைப் பறிகொடுத்து, பலரும் இவரை Subscribe செய்து வைத்துள்ளனர்.
பயனர்களை ஈர்த்து, சந்தா அடிப்படையிலான லாபம் ஈட்டி பலரது வாழ்க்கையையும் சீரழிப்பதாக அப்பெண்ணிற்குற்கு எதிராக அகில இந்திய மாணவர் சங்கம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.