மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) லலித் பதிநாயக்க இன்று வெள்ளிக்கிழமை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகியுள்ளார்.
நடைபெற்று வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த விசாரணை தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.










