உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தமக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை இரத்துச் செய்யக் கோரி முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்மானத்தை அறிவிப்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் 2027 ஜனவரி 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அனுமதியை வழங்குவதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானமே இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவிருந்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை ரத்துச் செய்யுமாறு கோரி சுரேஷ் சாலே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த மனு தொடர்பான சமர்ப்பணங்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் விரிவாகப் பரிசீலித்திருந்ததுடன், இன்று உத்தரவு பிறப்பிக்கப்படவிருந்தது.
எனினும், மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ தீர்மானம் 2027 ஜனவரி 28ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.










