இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 337 ரூபாவாக அதிகரித்துள்ளது.
செலான் வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.50 ரூபாவாகவும், விற்பனை விலை 337.75 ரூபாவாகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
NDB வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.10 ரூபாவிலிருந்து 328.30 ரூபாவாகவும், விற்பனை விலை 337.10 ரூபாவிலிருந்து 337.30 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கியில் கொள்வனவு விலை 328.60 ரூபாவிலிருந்து 328.85 ரூபாவாகவும், விற்பனை விலை 336.75 ரூபாவிலிருந்து 337 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 326.82 ரூபாவிலிருந்து 327.07 ரூபாவாகவும், விற்பனை விலை 336.75 ரூபாவிலிருந்து 337 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.
அதேவேளை, சம்பத் வங்கியில் கொள்வனவு விலை 328.75 ரூபாவிலிருந்து 329 ரூபாவாகவும், விற்பனை விலை 336.75 ரூபாவிலிருந்து 337 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.










