இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) பேருந்து சேவைகளில், குறிப்பாக கொழும்பு – கண்டி போன்ற குறுகிய தூரப் பயணங்களில், தேவையற்ற தேநீர் இடைநிறுத்தங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.
பயணிக்கும் தூரம் மற்றும் சென்றடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் தேவைகளும் கருத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், நீண்ட தூரப் பயணங்களின்போது சாரதிகளின் களைப்பைக் குறைப்பதற்கும், வீதி விபத்துக்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும் இடைநிறுத்தங்கள் அவசியமாக இருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கைகளை முடிந்தவரை விரைவில் நடைமுறைப்படுத்த இலங்கை போக்குவரத்துச் சபை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.










