இலங்கையின் மிகப்பெரிய போதைப்பொருள் விநியோகஸ்தர்களில் ஒருவராக பொலிஸாரால் அடையாளம் காணப்பட்ட சரித் சந்தகெலும் எனப்படும் ‘ரன் மல்லி’, பல்கேரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள், வெளிவிவகார அமைச்சின் ஊடாக இராஜதந்திர ரீதியில் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
எனினும், சந்தேகநபர் கைது செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக விபரங்களும், அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் குறித்த தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.










