முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, திடீரென ஏற்பட்டவருத்த நிலைமை காரணமாக கொழும்பு நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் அவரது ஊடகப்பேச்சாளர் குறித்த தகவலை மறுத்துள்ளார்.










