களுத்துறை – கொழும்பு பிரதான வீதியில் நாகஸ் சந்திக்கு அருகில் சொகுசு பேருந்தொன்றை வழிமறித்து அதன் சாரதி மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 6 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, மோட்டார் சைக்கிள்களில் பயணித்த சந்தேகநபர்கள் பேருந்தை வழிமறித்து அதன் சாரதி மற்றும் நடத்துநரைத் தாக்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் களுத்துறை வடக்கு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வாதுவை மற்றும் மொரொந்துடுவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










