பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் மற்றும் சுகாதார அமைச்சின் தலைமையில் நாடளாவிய ரீதியில் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஆண்டுதோறும் இலங்கையில் சுமார் 6,000 பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுடன், 1,000 பேர் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.










