பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் அமெரிக்கா உள்ளிட்ட ஆறு நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியுள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா, பெலாரஸ், ஆர்ஜென்டினா, கமரூன் மற்றும் புர்கினா பாசோ ஆகிய நாடுகள் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்காமல் நடுநிலை வகித்துள்ளன.
இதேவேளை, இலங்கை உள்ளிட்ட 175 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதுடன், சோமாலியா மாத்திரம் எதிராக வாக்களித்துள்ளது.
கருக்கலைப்பு மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் தொடர்பான விடயங்கள் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறித்த கவலை காரணமாகவே அமெரிக்கா வாக்களிப்பில் இருந்து விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான விடயங்கள் தொடர்பான தீர்மானங்களை அந்தந்த நாடுகளே சுயமாக மேற்கொள்ள வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டுள்ளது.











