மோசமான காற்றின் தரம் காரணமாக பார்வைத்திறன் பாதுகாப்பான விமானத் தரையிறக்கத்திற்குத் தேவையான அளவை விடக் குறைந்ததால், திருச்சி மற்றும் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான திட்டமிடப்பட்ட விமானச் சேவைகள் இன்று வியாழக்கிழமை இரத்து செய்யப்பட்டுள்ளன.
நிலவும் காற்றின் தரப் பாதிப்பு காரணமாக விமானங்கள் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்குத் தேவையான குறைந்தபட்ச பார்வைத்திறனைப் பேண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, குறித்த விமானங்களின் வருகைச் சேவைகளை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










