கொழும்பு, ஸ்லேவ் ஐலண்ட் பகுதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடத்தில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் தீ விபத்தினால் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தின் வழமையான செயற்பாடுகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.










