பாகிஸ்தானின் லர்கானா பகுதியை சேர்ந்தவர் அமீர் அலி குதேஜா தம்பதியினரின் 19 முதல் 30 வயதுடைய 7 குழந்தைகளும் ஒகஸ்ட் 1 ஆம் திகதி தங்களது பிறந்த தினத்தை கொண்டாடுவதுடன் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளனர்.
இவர்களில் பெண் இரட்டையர்கள்இ ஆண் இரட்டையர்களும் அடங்குவதாக தெரிவித்துள்ளனர்.இது உலக சாதனையாக மாறி இருப்பதாக கின்னஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்பு அமெரிக்காவில் கம்மின்ஸ் என்பவரது குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் இந்த சாதனையை வைத்திருந்தனர். அவர்கள் பிப்ரவரி 20 ஆம் திகதி பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
அமீர் அலி- குதேஜாவின் திருமண நாளும் ஒகஸ்ட் 1 எனவும் இவர்கள் 1991 ஆம் ஆண்டு தங்களது பிறந்தநாள் அன்று திருமணம் செய்து கொண்டுள்ளதுடன் மறுவருடம் ஒகஸ்ட் 1 ஆம் திகதி முதல் குழந்தையான சிந்து பிறந்துள்ளார். அடுத்தடுத்த குழந்தைகள் பிறப்பும் ஆகஸ்ட் 1 ஆம் திகதியாக இருந்ததை கடவுளின் பரிசு என்று தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.