மட்டக்களப்பு நாவற்காடு தபால் அலுவலகத்திற்கான புதிய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கு மாகாணப் பிரதி அஞ்சல் மா அதிபர் எஸ். பிரகாஸ் தலைமையில், மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் திருமதி கிருபாளினியின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

நீண்டகாலமாக வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த நாவற்காடு தபால் அலுவலகத்திற்கு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கந்தசாமி பிரபு தீவிர முயற்சியினால் 21.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது.

இதனையடுத்து புதிய கட்டட நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல்லினை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அதிதிகள் இணைந்து நாட்டி வைத்தனர்.

இப்புதிய கட்டடத்தை அமைப்பதற்கான காணியினை நாவற்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையினரும் நாவற்காடு முதியோர் சங்கத்தினரும் இணைந்து இலவசமாக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.











