சவூதி அரேபியாவில் உருவாகியுள்ள போர்ச் சூழல் காரணமாக, இலங்கையின் கட்டுநாயக்கவிற்கும் சவூதி அரேபியாவின் தமாமிற்கும் இடையிலான ஸ்ரீலங்கன் விமான சேவைகளை எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
இத்தீர்மானம் குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தொடர்பாடல் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏற்கனவே தலைநகர் ரியாத்திற்கான விமான சேவைகளையும், ஒக்டோபர் 18 வரை ஶ்ரீலங்கன் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எப்பொழுதும் தனது பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
நிலவும் சூழல் வணிக ரீதியிலான விமான சேவைகளுக்குப் பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்டவுடன் மீண்டும் சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்தினால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய, பயணிகள் தமது பயண முகவர்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் பின்வரும் வழிகளிலும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்
இலங்கைக்குள் தொடர்புகொள்ள: 1979
சர்வதேச அழைப்புகளுக்கு: +94117771979
WhatsApp (குறுஞ்செய்தி மட்டும்): +94744441979
உத்தியோகபூர்வ இணையத்தளம்: www.srilankan.com










