இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) தரவுகளின்படி, 2025 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2026 ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22.3 வீதத்தால் குறைந்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு 174,608 ஆக காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 135,643ஆக பதிவாகியுள்ளது.
மார்ச் மாதத்தில் 183,979 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.
இதன்படி 2026 ஆம் ஆண்டின் இதுவரையான மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகை 876,277 ஆக உயர்ந்துள்ளது.